90 கிட்ஸ்கான யூரிக் அமில அலர்ட்! இந்த அறிகுறியெல்லாம் இருக்கா? டோண்ட் ஒர்ரி!

Uric Acid Alert For Youngsters: அறிகுறிகள் மூலம் நோய் வருவதை அறிந்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம், எனவே யூரிக் அமிலத்தின் அறிகுறிகளை அறிந்துக் கொண்டு நோய்கள் வருமுன் காப்போம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2024, 10:48 AM IST
  • யூரிக் அமிலம் அதிகரித்தால் உங்கள் தோலில் ஏற்படும் அறிகுறிகள்!
  • 30 வயதா? இந்த அறிகுறிகள் இருந்தால் அலர்ட்டாக இருக்கவும்...
  • அமில அதிகரிப்பை கட்டுப்படுத்தினால் நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
90 கிட்ஸ்கான யூரிக் அமில அலர்ட்! இந்த அறிகுறியெல்லாம் இருக்கா? டோண்ட் ஒர்ரி! title=

உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கும்.இது ஒருவரின் வாழ்நாளையும், ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும். உண்மையில் யூரிக் அமிலம் என்பது, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகும்போது நமது உடலில் உருவாகும் ஒரு கழிவுப்பொருள். இந்தக் கழிவு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் போது அது முழுமையாக வெளியேறாமல் உடலில் தங்கிவிடுகிறது.

உடலில் கழிவுகள் அதிகமாகும்போது ஏற்படும் நிலை ஹைப்பர்யூரிசிமியா எனப்படுகிறது. இரத்தத்தில் யூரிக் அமில அளவுகளை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவது நல்லது. ஆனால், இதன் அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால் தான் அது சாத்தியமாகும்.

அதிலும் இளம் வயதில் இருக்கும் ஆண்கள், யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்பதைத் தெரிந்துக் கொண்டால், அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது சுலபமாகிவிடும். அதிலும் மருந்து மாத்திரை இல்லாமல் உணவில் மாற்றங்கள் செய்வதாலேயே நோய் ஏற்படும் வாய்ப்புகளை தவிர்க்கலாம்.

கை மற்றும் கால்களில் வீக்கம்

கை கால்களில் வீக்கம் ஏற்படுவது நடக்கும்போது சிரமமாக இருப்பது ஆகியவை உடலில் யூரிக் அமிலம் அதிகரித்திருப்பதற்கான காரணமாக இருக்கலாம். அதிலும் முழங்கால், மணிக்கட்டுகள் என மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால், அது யூரிக் அமிலம் அதிகரித்திருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். 

மேலும் படிக்க | நோன்பு திறக்க... பாலும் பேரீச்சம் பழமும் ரொம்ப நல்லது - ஏன் தெரியுமா?

மூட்டுகளில் திடீர் வலி
உடலில் உள்ள மூட்டுகளில், திடீரென வலி ஏற்படுவது யூரிக் அமிலம் அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வலி மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும், மேலும் காரணமின்றி அடிக்கடி ஏற்படும். சுருக் சுருக் என வலிப்பது பயத்தை அதிகரிக்கலாம். ஆனால், யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், அதிக பயப்பட வேண்டியதில்லை. உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் இது குறைந்துவிடும்.

தோல்கள் தடிப்பது
யூரிக் அமிலம் உடலில் படியத் தொடங்கும்போது, அது படிகமாக உடலில் படியும். அப்போது, மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் கீழ் படிவதால், அந்த இடம் தடித்துவிடும். இது அதிகமாகும்போது, அது கட்டியாக மாறும். அதில் வலி ஏற்படும்போது, வேலை செய்வதில் சிரமம் ஏற்படும்

செயல்படுவதில் சுணக்கம்
யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதால், மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதால், வேலை செய்வது கடினமாகலாம். விரல்களை முழுமையாக நகர்த்துவது, பொருட்களைப் பிடிப்பது ஆகியவை சிரமமாக இருக்கும்.  

மேலும் படிக்க | வியக்க வைக்கும் காளான்... உடல் பருமன் முதல் வலுவான எலும்புகள் வரை..!

மரத்துப் போவது
விரல்கள் அடிக்கடி மரத்துப்போவது என்பது யூரிக் அமிலம் அதிகரிப்பதின் அறிகுறியாக இருக்கலாம். இது விரல்கள் மற்றும் விரல்களுக்கு இடையிலான பாகங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தோல் அமைப்பில் மாற்றம்
யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் தோல் மாறலாம். நிறமாற்றம் ஏற்படுவது மட்டுமல்ல, தோல் பளபளப்பாகவோ அல்லது மெலிந்தோ காணப்படலாம். சில சமயங்களில் அங்கு தோன்றும் கட்டிகள் மட்டும் கடினமாகவும், தோல் மெலிந்தும் போகலாம்

தீவிர வலி

யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதால், சிலருக்கு வலி தீவிரமாகலாம், இந்த வலி பிற வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படுத்தலாம். இது நமது செயல்பாடுகளை பாதிக்கும். 

இதுபோன்ற அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதால், நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அறிகுறிகள் மூலம் நோய் வருவதை அறிந்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம், எனவே வருமுன் காப்போம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அதிரடியாய் ஏறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் புளிப்பு பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News