எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!

Tips For Fast Calorie Burner : நம்மில் பலரும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பாேம். அப்படி இருக்கும் நாம், எக்ஸர்சைஸ் செய்யும் முன்னர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2024, 06:33 PM IST
  • வெயிட் லாஸ் டிப்ஸ்
  • வர்க்-அவுட் செய்யும் முன்னர் செய்ய வேண்டியவை
  • என்னென்ன தெரியுமா?
எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!  title=

Tips For Fast Calorie Burner : உடல் பருமன் என்பது உடல் நல பாதிப்போ அல்லது தீர்வே இல்லாத  பிரச்சனையோ கிடையாது. வாழ்வில் அனைவருக்குமே உடல் பருமன் எனும் இருக்கும் ஏதேனும் ஒரு தருணம் வந்திருக்கும். அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதில் திறமை இருக்கிறது. உடல் பருமன் நம் வாழ்வில் பல்வேறு நூல் பாதிப்புகளை எதிர்கொள்ள வழி வகுக்கலாம். குறிப்பாக இதய நோய் கோளாறுகள், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை வரலாம். பெண்கள் இதனால் தைராய்டு பிசிஓடி உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தவிப்பர். எனவே இது போன்ற பாதிப்புகளை எதிர் கொள்ளாமல் இருக்க நாம் கொஞ்சம் முயற்சி செய்து உடல் எடையை குறைப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. 
.
உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்: 

நம் உடலைப் பொறுத்தவரை வயிறு, கால்கள் மற்றும் கையில் தான் அதிக சதை இருக்கும். அப்படி இருந்தால் தான் நமது உடல் எடை அதிகரித்தது போல காணப்படும். இதை தவிர்க்க தீவிர உடற்பயிற்சிகள் (HIT workouts), அதிதிவீர உடற்பயிற்சிகள் (HIIT Workouts) போன்ற பல உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதை தினமும் செய்தால் நம் உடல் எடை இளைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் நாம் சில விஷயங்களை செய்தால் நாம் செய்யும் பயிற்சிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மருத்துவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அப்படி நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா? 

அதிக உணவு உட்கொள்ளல்: 

சாதாரணமாகவே நாம் அதிகமாக உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் நாம் அதிக உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படி செய்தால் உடற்பயிற்சி செய்யும் போது வயிறு கோளாறுகளுக்கு ஆளாக்கப்படலாம். இது உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம் உடலை சோர்வடைய செய்யும்.

கஃபைன் உட்கொள்ளல்:

அதிகப்படியான கபையின் உட்கொள்ளல் உடலில் நடுக்கம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே மிதமான அளவில் பிளாக் காபி உள்ளிட்ட கஃபைன் உட்கொள்ளலை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

தூக்கம்: 

உடல் எடையை குறைக்க நாம் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறோமோ அதே அளவுக்கு உடலுக்கு ஓய்வு கொடுப்பதும் அவசியமாகும். இந்த தூக்கம் தான் நம் உடலில் உற்பத்தியாகும் பசி ஹார்மோன்களை பாதுகாக்கிறது. நல்ல தூக்கம் இல்லை என்றால் அதிக பசி ஏற்படலாம். எனவே ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு தேவைப்படும் அளவிற்கு எத்தனை மணி நேரம் வேண்டுமோ அத்தனை மணி நேரம் தூங்க வேண்டும். 

தண்ணீர்: 

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடாது என்று சொல்வார்கள் அது போல நம் உடலுக்கு தேவையான பெட்ரோல் தண்ணீர் தான்.  எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்து பழக வேண்டும். 

மேலும் படிக்க | Rapid Weight Loss: வேகமா தொப்பையை குறைக்கணுமா? கொய்யா சாப்பிடுங்க போதும், ஈசியா குறைக்கலாம்

நட்ஸ்: 

உடல் எடையை குறைக்க நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. கொழுப்பு தரும் உணவுகளை தவிர்த்து விட்டு, புரத உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் பசியை வலுவுர செய்வதுடன் உடல் எடையை குறைக்கவும் செய்யும். உடலுக்கு புரதம் தரும் சிறந்த உணவுகள் ஒன்று நட்ஸ் வகைகளாகும். எனவே வொர்க் அவுட் செய்யப் போவதற்கு முன்னர் வால்நட்ஸ், உலர் திராட்சைகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ்களை ஒன்று இரண்டு எடுத்து சாப்பிடலாம். 

உடற்பயிற்சிக்கு தயாராகுதல்:

45 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் பத்து நிமிடமாவது வார்ம்-அப் செய்வது அவசியமாகும். இதை செய்துவிட்டு உடற்பயிற்சி செய்யும் போது நம் தசைகள் கொஞ்சம் தளர்ந்து உடல் எடையை குறைக்க வழி வகுக்கும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டக்குன்னு வயிறு தட்டையாகனுமா? தினமும் 10 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News