யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் உணவுப் பழக்கங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அதாவது எதை உட்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. குறிப்பாக யூரிக் ஆசிட் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பால் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி பொதுவானதாக இருக்கிறது.
நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது மற்றும் அனைத்து வகையான நோய்களைப் பற்றியும் ஆயிரக்கணக்கான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
உடலில் யூரிக் அமிலம் ஏன் அதிகரிக்கிறது?
ஒருவரின் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து வருகிறது என்றால், அவரது உடலில் பியூரினின் அளவு கூடுகிறது என்றுதான் பொருள். உண்மையில், யூரிக் அமிலம் என்பத், செரிமானத்தின் போது பியூரின்கள் உடைக்கப்படும்போது உருவாகும் ஒரு அமிலமாகும். இந்த அமிலம் உடலின் கழிவுப் பொருளாகும்.
அதிக பியூரின் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, அது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் மூட்டு வலி, நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
எனவே, யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீஸ், முட்டை, மீன், சிவப்பு இறைச்சி அல்லது வெள்ளை இறைச்சி போன்ற அதிக புரத உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், இந்த உணவுகளில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன.
மேலும் படிக்க | இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!
பால் குடித்தால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா?
புரதத்தின் நல்ல ஆதாரமாக இருக்கும் பாலில் உள்ள ப்யூரினின் அளவு, சிவப்பு இறைச்சி, முட்டை போன்ற பிற புரத மூலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் இருக்கிறது. எனவே, பால் குடிப்பதால் பிரச்சனையோ, தீமையோ இல்லை.
ஆனால் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் அதிக அளவில் நன்மை பயக்கும்.
உதாரணமாக, பால் மற்றும் சைவ உணவுகளில் இருந்து பெறப்படும் புரதம் உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இது தவிர, கால்சியம் நிறைந்த பாலை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அதிகரிப்பால் கை மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பிரச்சனையிலிருந்து விடுபட நன்மை பயக்கும்.
பாலின் முக்கியத்துவம்
யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் அவசியம், ஆனால் அது அளவுக்கு அதிகமாக போகக்கூடாது. யூரிக் அமிலம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவில் பால் குடிக்கலாம். ஏனென்றால், ப்யூரின் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதால் புரத உணவுகளை தவிர்த்தாலும், உடலுக்கு ஓரளவாவது புரதம் வேண்டும் எனவே உடலுக்குத் தேவையான புரதங்கள் உள்ள பாலை குடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
யூரிக் ஆசிட் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலில், சீஸ், முட்டை, மீன், சிவப்பு இறைச்சி அல்லது வெள்ளை இறைச்சி ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இவற்றைத் தவிர, கீரை, பட்டாணி, ப்ரோக்கோலி, காளான்கள் போன்ற சைவ உணவுகளிலும் ப்யூரின் அதிக அளவில் உள்ளது. எனவே, இதுபோன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ