உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு தொடர்பான அண்மைத் தகவல்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2020, 06:58 AM IST
  • இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது ஏழு லட்சத்தை நெருங்கிவிட்டது
  • கொரோனா (COVID-19 Patient) பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது.
  • கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் மட்டுமே இந்தியாவை விட முன்னணியில் உள்ளது.
  • இதுவரை நாட்டில் ஒரு கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு title=

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,58,291. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,34,460ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61,84,379.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,97,413 ஆகவும், பலி எண்ணிக்கை 19,693 ஆகவும் உயர்ந்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் COVID-19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, அதிக மக்கள் தொகை கொண்ட இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டது.

COVID-19 நோய்த்தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்தி, மூன்றாம் இடத்துக்குச் சென்றது இந்தியா.

பாரிஸில் மார்ச் 13 ஆம் தேதி மூடப்பட்ட லோவர் அருங்காட்சியகம், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

பிற செய்தி படிக்கவும் | COVID-19 சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை குறித்து புகாரளிக்க ஹெல்ப்லைன்!!

கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-

1. அமெரிக்கா - 28,88,635

2. பிரேசில் - 16,03,055

3. இந்தியா - 6,97,413

4. ரஷ்யா - 6,80,283

5. பெரு - 3,02,718

6. சிலி - 2,95,532

பிற செய்தி படிக்கவும் | இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ICMR

7. இங்கிலாந்து - 2,86,931

8. மெக்ஸிகோ - 2,56,848

9. ஸ்பெயின் - 2,50,545

10. இத்தாலி - 2,41,184

Trending News