Worst Oil for Hair: தலையில் வழுக்கையை உண்டாக்கும் 5 எண்ணெய்கள்!

சில எண்ணெய்கள் முடிக்கு அதிக தீங்கு விளைவிக்கும். தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 07:28 PM IST
  • தலையை சொட்டையாக்கும் எண்ணெய்கள்
  • தலைமுடியை கொட்ட வைக்கும் எண்ணெய்
  • முடிகளுக்கு எதிராகும் எண்ணெய்கள்
Worst Oil for Hair: தலையில் வழுக்கையை உண்டாக்கும் 5 எண்ணெய்கள்!   title=

Worst Oil for Hair: நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய பல முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன. மறந்தந்தும் கூட பயன்படுத்தக் கூடாத 5 எண்ணெய்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தலைக்கு கவசமாக மட்டுமல்ல, அழகையும் அதிகரிக்கும் ஐந்து விதமான எண்ணெய்கள் உள்ளன. கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க நாம் அனைவரும் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். முடி பராமரிப்பு வழக்கத்தில் ஒரு நல்ல முடி எண்ணெய் தேவை.

ஆனால் சில எண்ணெய்கள் முடிக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள் எவை என்று தோல் மருத்துவர் டாக்டர். நிவேதிதா தாது கூறுகிறார்.

மேலும் படிக்க | தலைமுடி முதல் பாதம் வரை-பராமரிப்பு முறைகள்

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பல்வேறு வகையான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய பல முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன என அவற்றை பட்டியலிடுகிறார் மருத்துவர்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் முடியின் வேருக்கு நல்லது மற்றும் முடி பராமரிப்புக்கு நல்லது.  ஆனால் இது தலைமுடியில் எண்ணெய் பிசுபிசுப்பை தக்க வைக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலூரோபீன் முடி வளர்ச்சி சுழற்சியை நேரடியாக பாதிக்கிறது. 

ஆலிவ் எண்ணெயில் இயற்கையாகவே உள்ள மெடோஜெனிக், தோலின் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்துகிறது. எனவே, ஒருவருக்கு முகப்பரு வரும் பழக்கம் இருந்தால், அவர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, முடியின் அடர்த்தியை குறைப்பதுடன், முகப்பருவையும் ஏற்படுத்தும்.
 
விளக்கெண்ணெய்
முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பலருக்கு விளக்கெண்ணெய் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விளக்கெண்ணெய்யை தலைக்குப் போடுவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதிக பசைத்தன்மையைக் கொண்ட விளக்கெண்ணெய் முடியின் தன்மையை முரடாக்கிவிடும்.

health
 
கற்பூர எண்ணெய்
முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் கற்பூர எண்ணெய் செயல்படுகிறது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது.

இது உச்சந்தலையை வறண்டு போகச் செய்வதும், முகத்தை வறட்சியாக்கும். தேம்பல் மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | அறுவைசிகிச்சை மூலம் தலைமுடியை தங்க முடியாக மாற்றிய பாடகர்

எலுமிச்சை எண்ணெய்
சிலர் தலைமுடியை லேசாக பளபளப்பாக மாற்ற எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் மறுபுறம், இது உங்கள் தலைமுடியை மேலும் சேதப்படுத்தும். எலுமிச்சை எண்ணெய் பல ரசாயனங்களளைக் கொண்டுள்ளது.

அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை எண்ணெயை முறையாக பயன்படுத்தாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும்.உங்கள் தலைமுடிக்கு எலுமிச்சை எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது, தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, வறண்டு போகச் செய்யும்.  

கனிம எண்ணெய்
கனிம எண்ணெய் என்பது பெரும்பாலும் பெட்ரோலியம், வெள்ளை பெட்ரோலியம், பாரஃபின், திரவ பாரஃபின், திரவ பெட்ரோலேட்டம் மற்றும் பாரஃபின் மெழுகு என பலவற்றால் தயாரிக்கப்படுகிறது. இவை கூந்தலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. 

எனவே முடி பராமரிப்பு பொருட்களை வாங்கும் போது, அதில் மினரல் ஆயில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மினரல் ஆயில் பயன்படுத்தினால், தோலில் வீக்கம், அரிப்பு, உச்சந்தலையில் எரிச்சல் அல்லது சொறி போன்ற பல ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.

மேலும் படிக்க | தினமும் தலைமுடியை அலசுகிறீர்களா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News