நோர்டிக் டயட் எடை இழப்புக்கு மட்டுமல்ல, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது -
நோர்டிக் டயட்டின் ஆரோக்கிய நன்மைகள் எடை குறைப்புடன் நின்றுவிடுவதில்லை. உணவில் உள்ள கொழுப்புகளின் தனித்துவமான கலவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ராலையும் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
எடை இழப்புக்கான பிரபலமான உணவு, நோர்டிக் உணவு, ஒரு பரிப்பூரண முழு உணவாகும். பொதுவாக நார்வே, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நார்டிக் பகுதிகளில் பிரபலமான இந்த உணவு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதை அண்மை ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
நோர்டியாக் உணவின் நேர்மறையான ஆரோக்கிய விளைவுகள் எடை இழப்புக்கு மட்டுமே காரணம் என்று இது வரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால் ஒரு புதிய ஆய்வில், நோர்டிக் உணவு உங்கள் எடையைக் குறைக்கிறதா இல்லையா என்பதைத் தவிர இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்றும் உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட ஆராய்ச்சி குழு, நோர்டிக் உணவில் உள்ள கொழுப்புகளின் தனித்துவமான கலவையை குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்கு சாத்தியமான விளக்கமாக சுட்டிக்காட்டியது.
நோர்டியாக் உணவு என்றால் என்ன?
நோர்டியாக் என்பது ஒரு உணவு முறை. இது, பின்வரும் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது:
அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் பருவகால மற்றும் கரிம உணவுகள்
அதிக அளவிலான முழு தானியங்கள்
கடல்கள், ஏரிகள் மற்றும் காடுகளில் இருந்து கிடைக்கும் இயற்கையான உணவு
குறைந்த அளவிலான உயர்தர இறைச்சி
மிகவும் குறைந்த அளவிலான பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை உணவுகள்
வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள்
உணவை வீணடிக்காமல் இருப்பது
பெர்ரி, காய்கறிகள், மீன், முழு தானியங்கள் மற்றும் ராப்சீட் எண்ணெய் ஆகியவை நோர்டிக் உணவின் முக்கிய பொருட்கள் ஆகும், மேலும் இவை மிகவும் ஆரோக்கியமான, சுவையான மற்றும் நிலையானதாக கருதப்படுகின்றன.
நோர்டிக் உணவு உடல் பருமனை தடுக்கும் மற்றும் இருதய நோய், வகை 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
நோர்டிக் உணவில் உள்ள கொழுப்புகள் நம்மை ஆரோக்கியமாக்குகின்றன
ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 200 பேரை (50 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அவதானித்தனர். அனைத்து பங்கேற்பாளர்களும் உயர்ந்த பிஎம்ஐ மற்றும் நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயத்தில் இருந்தனர்.
மேலும் படிக்க | சர்வரோக நிவாரணி சோம்பு தண்ணீர்!
ஒரு குழுவுக்கு நோர்டிக் உணவுப் பரிந்துரைகளின்படி உணவுகள் வழங்கப்பட்டன. அவர்களின் உணவில் கட்டுப்பாட்டும் இருந்தது. அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது.
ஆறு மாதங்களாக நோர்டிக் உணவில் இருந்த பங்கேற்பாளர்களுக்கு, குறைந்த கொலஸ்ட்ரால் அளவுகள், இரத்தத்தில் உள்ள நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்பு குறைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலோனோருக்கு கணிசமான அளவு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர்களின் உடல் எடை சீராக இருந்ததோடு, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்பட்டது, இந்த முடிவு ஆராய்ச்சியாளர்களே எதிர்பார்க்காத ஒன்று.
"இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் மீதான நேர்மறையான விளைவுகள் எடை இழப்புக்கு மட்டுமே காரணம் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் அது அவ்வாறு இல்லை என்று கண்டறிந்துள்ளோம்” என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையின் ஆராய்ச்சியாளரும், பிரிவின் தலைவருமான லார்ஸ் ஓவ் டிராக்ஸ்டெட் கூறினார்.
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR