"உன் நண்பனை பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்பது பழமொழி, "உன் Browsing History-யை காண்பி, உன் ஜாதகத்தையே சொல்கிறேன்" எனபது தான் புதுமொழி.
ஆமாங்க... இப்போதை கால கட்டத்தில் உங்கள் மொபைல், அல்லது PC Browsing History மட்டும் கொண்டு நம் ஜாதகத்தினையே கனித்து விட முடிகிறது. பெரும்பாலும் நம் நண்பர்கள் நம் மொபைல் பேனை கேட்கும் போது முதலில் நாம் செய்யும் காரியம் Browsing History-யை அழிப்பது தான்.
போனில் தேங்கிருக்கும் Browsing History மட்டும் அழித்துவிட்டால் போதுமா?... கிடையாது Google Search பெட்டியினில் ஒரு வார்த்தையினை டைப் செய்தால் போதும்,.. அந்த வார்த்தைக்கு தொடர்பாக நீங்கள் முன்னதாக தேடிய அனைத்தினையும் பிறருக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும் நம் Google.
உதாரனத்திற்கு உங்கள் போனில் நீங்கள் 'tamilnadupostal, tamilwap, tamilmini, tamilnadugovt' என பல tamil என்னும் வார்த்தை அடங்கிய இணையதளங்களை தேடியுள்ளீர் என வைத்துக்கொள்வோம். பின்னர் உங்கள் Browsing History-யை முழுவதுமாக அழித்துவிடுங்கள். இப்போது மீண்டும் Google Search உரையாடல் பெட்யில் சென்று tamil என டைப் செய்யும் போதே... இதற்கு முன்னதாக நீங்கள் தேடிய 'tamilnadupostal, tamilwap, tamilmini, tamilnadugovt' அனைத்தும் பயனருக்கு காண்பித்து விடும்.
ஏன்?.... ஏனெனில் நம்முடைய தேடல்கள் தமது மொபைல் (அ) கணினியில் மட்டும் சேமிக்கப் படுவதில்லை.. நமது Google கணக்கிலும் தான். உங்கள் Google கணக்கினை பயன்படுத்தி நீங்கள் எங்கெல்லாம் இணைத்தில் உள்நுழைகிறீரோ அது அனைத்தும் உங்கள் Google Activity-ல் சேமிக்கப் படும் இதனால் தான் முன்பு தேடிய இணைப்புகள் எல்லாம் நமக்கு தேடலின் போது காண்பிக்கப் படுகிறது.
சரி விடுங்கள்... இந்த சேமிப்பினை எப்படி அழிப்பது....
- https://myactivity.google.com/myactivity என்ற இணப்பினை பின்தொடரவும்
- பின்னர் வரும் பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளி குறியினை கிளிக் செய்யவும்.
- கீழே வரும் தேர்வுகளில் Delete Activity by என்ற தேர்வினை கிளிக் செய்யவும்.
- பின்னர் வரும் பக்கத்தினில் Today, Yesterday, Last 7 days, Last 30 days, All time என பல தேர்வுகள் இருக்கும். இதில் All time, என்பதினை பயன்படுத்தி கீழே இருக்கும் Delete பொத்தானை கிளிக் செய்தால் போதும். அவ்வளவு தான்... உங்கள் ஜாதகம் Google கணக்கில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது.