கோடா: இருவேறு சாலை விபத்தில் 3 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நிகழ்ந்த இருவேறு சாலைவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்!

Last Updated : Jan 27, 2018, 07:26 PM IST
கோடா: இருவேறு சாலை விபத்தில் 3 பேர் பலி! title=

கோடா: ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நிகழ்ந்த இருவேறு சாலைவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்!

சப்படா குணா தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தாரா பாட்டக் பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவயிடத்திலேயே இருவர் பலியாகினர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பலியானோர் சூரஜ் பைரவா(22), முகேஷ் பைரவா(25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்டவரின் பெயர் அரவிந்த தக்காத் என அறியப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் அருகாமையில் இருக்கும் பாரன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு விபத்தில், பாறைகள் கொண்ட லாரி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் காட் கா பாரன் பகுதியை சேர்ந்த ராகேஷ் பைரவா என்பவர்(25) சம்பவயிடத்திலேயே பலியானார். 

இச்சம்பவத்தில் ஜகதீஷ் மீனா மற்றும் சோனு கீத்தக் என்னும் இரு ஊழியர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்து இருசம்பவம் தொடர்பாகவும் ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Trending News