லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஷம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரை ஆலை ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
’சரஸ்வதி ஷிஷு மந்திர் பொது பள்ளி’ மாணவர்கள் பலரும் வாந்தி, குமட்டல், அரிப்பு மற்றும் கண்களில் கண்ணீர் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம் இதுகுறித்து விசாரிக்கையில், மாணவர்களின் மோசமான நிலைமைக்கு அருகில் இருக்கும் சர்கரை ஆலை கழிவுகளே காரணம் என தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் முசாபர்நகர் மற்றும் மீரட் மருத்துவமனைகளுக்குக் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் பாதிப்படைந்த குழந்தைகளின் பெற்றோர் தங்கள் வக்கீல்களை கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் இதுதொடர்பான விளக்கத்தை கேட்டுள்ளனர்.
பின்னர் மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலரை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்க அழைத்துச் சென்றனர்.
மேலும் பள்ளியில் முறையான மருத்துவ பாதுகாப்பு வசதி இல்லை எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில். சம்மந்தப்பட்ட சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ன கூறியுள்ளார்.