டெல்லியை வதைக்கும் COVID-19, ஒரே நாளில் 88 மருத்துவ ஊழியருக்கு கொரோனா...

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில் டெல்லியில் இரு மருத்துவமனைகளில் இருந்து மட்டும் 88 சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Apr 27, 2020, 08:40 AM IST
டெல்லியை வதைக்கும் COVID-19, ஒரே நாளில் 88 மருத்துவ ஊழியருக்கு கொரோனா...

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில் டெல்லியில் இரு மருத்துவமனைகளில் இருந்து மட்டும் 88 சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியின் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையின் 30 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட குறைந்தது 39 சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

READ | குளோரோகுயின் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் வரலாம் -கனடா எச்சரிக்கை!

தொடர்ந்து டெல்லியின் ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையின் 58 சுகாதார ஊழியர்களுக்கும் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக, இதுவரை டெல்லியின் இரண்டு மருத்துவமனைகளில் மட்டும் மொத்தம் 88 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட குறைந்தது முப்பத்தொன்பது ஊழியர்களும் சாகேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரண்டு இதய நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, AIIMS டெல்லியில் உள்ள கார்டியோ-நியூரோ சென்டரில் 30 சுகாதாரப் பணியாளர்கள் நரம்பியல் பிரச்சினைகளுடன் AIIMS-க்கு வந்த ஒரு நபருடன் தொடர்பு கொண்டு பின்னர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ | மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் ஒருவர் பலி!

நாடு முழுவதும் நேர்மறை கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 26,917-ஐ எட்டியுள்ளது, இதில் 20,177 செயலில் உள்ள வழக்குகள் ஆகும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த தரவுகளின்படி, இதுவரை 5,913 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், அதே நேரத்தில் நாட்டில் 826 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News