நாடாளுமன்ற இரு அவையை சேர்ந்த அனைத்து பாஜக எம்.பிகளுக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் 'அபியாஸ் வர்கா' நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது!
நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைச் அவைகயில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பிக்கள், அவைக் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் பயிற்சி அளிக்க பாஜக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. இன்று முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் நடைபெறும் இந்த முகாமில், மசோதாவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் முறை குறித்தும், எதிர்கட்சியினர்களுடனான விவாதத்தில் எப்படி முறையாக பேச வேண்டும் என்பது குறித்து விளக்குமளிக்கப்படவும் உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு 'அபியாஸ் வர்கா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த 2 நாள் பயிற்சி வகுப்பு இன்று (ஆக., 03) காலை 10 மணிக்கு துவங்கி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
ஜே.பி.நட்டாவின் துவக்க உரையுடன் துவங்கும் இந்த பயிற்சி வகுப்பில், பார்லி.,யில் எம்.பி.,க்களின் பங்கு குறித்து இன்று மாலை அமித்ஷா உரையாற்ற உள்ளார். நாளை (ஆக., 4) பா.ஜ., எம்.பி.,க்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
Delhi: The two-day training programme 'Abhyas Varga' organised for all BJP MPs from Lok Sabha & Rajya Sabha, is underway at Parliament Library Building. pic.twitter.com/z1MieKJfxT
— ANI (@ANI) August 3, 2019
சமீப காலமாக பா.ஜ.க எம்.பி., எம்எல்ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பாலியல் புகார்களில் சிக்குவது, டோல்கேட் ஊழியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் இவற்றை தவிர்க்க இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து பாஜக எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார்கள்.