புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (ஜூலை 28) மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். "2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் முக்கிய முழக்கமாக இருந்த "ஆச்சே தின்" மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
மக்கள் போதுமான அளவுக்கு "அச்சே தின்" (நல்ல நாள்) பார்த்து விட்டார்கள். இனி நீங்கள் (மோடி அரசு) "சச்சே தின்" (உண்மையான நாட்கள்) பார்ப்பீர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மேற்கோள் காட்டினார்.
இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் மகத்தான வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக நாட்டின் தேசிய தலைநகரில் இருக்கும் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
டி.எம்.சி (All India Trinamool Congress) தலைவர் மம்தா பானர்ஜி தற்போது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நேரத்தில், மம்தா பானர்ஜியின் டெல்லி வருகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
பெகாசஸ் உளவு (Pegasus Spyware) விவகாரம் உட்பட விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி உடன் பேசினேன். மோடி அரசை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார். மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புகிறது, மாநில கட்சிகளும் காங்கிரஸை நம்புகிறது எனக் கூறினார்.
ALSO READ | Pegasus: ஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்: ராகுல் தாக்கு
அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் உதவ விரும்புகிறேன். நான் எதிர்கட்சிகளை வழிநடத்தும் ஒரு தலைவராக இருக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு பணியாளராக இருக்க விரும்புகிறேன் என்றார்.
மேலும், "நான் ஒரு அரசியல் ஜோதிடர் அல்ல, அது அரசியல் நிலைமை, கட்டமைப்பைப் பொறுத்தது. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து வேறு யாராவது வழிநடத்தினால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
தற்போது பெகாசஸ் விவகாரம் என்பது, அவசரநிலையை விட இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது. ஆனால் இதுக்குறித்து மோடி அரசி எதுவும் பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டால், அவர்கள் ரெய்டு அனுப்புகிறார்கள். ஆனால் பெகாசஸ் விவகாரம் குறித்து எந்த பதிலும் இல்லை. ஜனநாயக நாட்டில் பெகாசஸ் என்பது நிலைமை மிகவும் தீவிரமானது. இது அவசரநிலையை விட மிகவும் தீவிரமானது. எனவே மோடி அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா கூறினார்.
நேற்று செவ்வாயன்று, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். முன்னதாக மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை சந்தித்திருந்தனர்.
ALSO READ | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR