மியான்மர்-இந்தியா எல்லை பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது...
மியான்மர்-இந்தியா எல்லை பகுதியான அருணாச்சல பிரதேச எல்லை மண்டலத்தில் திடீர் என நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது இன்று மாலை சரியாக 3 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
An earthquake with a magnitude of 5.5 on the Richter Scale hit Myanmar-India (Arunachal Pradesh) Border Region at 3:47 IST today.
— ANI (@ANI) November 28, 2018
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.