டெல்லி தேர்தல்: வெற்றியை கொண்டாட பட்டாசு வெடிக்க வேண்டாம்

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

Last Updated : Feb 11, 2020, 01:56 PM IST
டெல்லி தேர்தல்: வெற்றியை கொண்டாட பட்டாசு வெடிக்க வேண்டாம் title=

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8 ஆம் தேதி நடந்தது.  இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இதனால் அக்கட்சி தொண்டர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர். மேலும் இனிப்புகளை வாங்கி அவற்றை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்.

Trending News