உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற ஊகங்கள் நிலவும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்குள், தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையம் நிறைவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை திங்கள்கிழமை சந்தித்தது. பின்னர் உத்திரபிரதேசத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருந்த தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளைச் சந்தித்த பேசிய, ஒரு நாள் கழித்து CEC இன் முக்கியமான செய்தியாளர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையக் குழு, அதிகாரிகளுடன் பல கூட்டங்களை நடத்தியது.
"தேர்த ஆணையக் குழு மாவட்ட நீதிபதிகள், காவல்துறைத் தலைவர்கள், ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக வரவிருக்கும் தேர்தலுக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்தது" என்று அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களான பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான அய்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே பயணம் மேற்கொண்டது.
ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR