பாபா ராம்தேவின் பதாஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இன்று பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் உறைந்த காய்கறிப் பிரிவுகளில் ஐந்து புதிய தயாரிப்புகளை அறிமுகம்படுத்தியுள்ளது!
அந்த வகையில் பால் உற்பத்தி பொருட்களில் பசும்பால், தயிர், மோர் மற்றும் பன்னீர் ஆகியவைகளும், உறைந்த காய்கறி பிரிவில் பட்டாணி, கலைவை காய், இனிப்பு சோளம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது.
#WATCH Baba Ramdev milking a cow during Patanjali dairy product range launch in New Delhi earlier today pic.twitter.com/jrkNNkuky8
— ANI (@ANI) September 13, 2018
அதேவேலையில் மற்ற பிரிவுகளில் கால்நடை உணவு மற்றும் உணவைச் சப்ளிமெண்ட்ஸ், சோலார் பேனல்கள் மற்றும் திவ்யா ஜால் ஆகிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.
பதாஞ்சாலி நிறுவனத்தில் வெளியாகும் பால் விலையானது மற்ற நிறுவன பால் பாக்கெட்டுகளை விட ரூ.2 குறைவாக இருக்கும் என பதாஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவித்துள்ளார். மேலும், பால் மற்றும் அதன் தயாரிப்புகளை டெட்ரா பொதிகளில் அறிமுகப் படுத்துவதாகவும் பதாஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே பசு நெய், முழு பால் பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது.
ஹரித்வாரை மையாமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் நன்கு செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், பதஞ்சலி ஆயுர்வேட் அதன் FMCG பொருட்களுக்காக மின்வணிகத்திற்குள் நுழைந்தது, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பங்குபெற்றது. இது Grofers, Shopclues, BigBasket, 1mg, PaytmMall மற்றும் Netmeds உள்ளிட்ட எட்டு வீரர்களுடனும் பங்களித்திருக்கிறது, அதன் மூலம் அதன் மொத்த தயாரிப்பு தயாரிப்புகள் ஆன்லைனில் கிடைக்க வழி வகுத்துள்ளது!