விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமாக தீர்வை ஒன்றை எட்ட வேண்டும் எனற நோக்கில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவில் இருந்த பூபேந்தர் சிங் மான் திடேரென்று தான் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் கோரி தலைநகர் தில்லியில் (Delhi) உள்ள எல்லை பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த போராட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் (SC), விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி வெளியிட்டது.
மேலும், புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததோடு, போராடத்தில் (Farmers Protest) ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. அந்த குழுவில் பூபேந்தர் சிங் மானும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் குழுவில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பூபேந்தர் சிங் மான் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் தன்னை இடம்பெற செய்ததற்கு உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ள பூபேந்தர் சிங், விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் இருப்பேன் என்றும், விவசாயிகள் நலனுக்காக எந்த ஒரு தியாகத்தை செய்யவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் குழு அமைத்து மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் அந்தக் குழுவில் இருந்து ஒருவர் வெளியேறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், அவர் குழுவில் இருந்த விலகிய பிறகு கனடாவில் (canada) இருந்து மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மிரட்டல் விடுப்பது யார் என்பதும், எதற்காக என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவர் மிரட்டல் விடுக்கப்பட்டதால் விலகினாரா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ALSO READ | வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது Supreme Court
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR