Bihar Polls 2020: கொரோனா வைரஸ் நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சாட்டினார். முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தலைவர்கள், இப்போது மீண்டும் மக்களிடம்ம வாக்குகளை சேகரிக்க வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மாதேபுராவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார். கிடைத்ததா? நான் பீகாரை மாற்றுவேன் என்று நிதீஷ் குமார் (Nitish Kumar) சொன்னார். ஆனால் பீகார் மாறியதா? எனப்பல கேள்விகளை எழுப்பினார்.
ALSO READ | காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: ராகுல் காந்தி
மேலும் ராகுல் கூறுகையில், "இந்தத் தேர்தலில், அதே இளைஞர்கள், எங்களுக்கு வேலை ஏன் வழங்கவில்லை என்று முதல்வரிடம் கேட்டால், அவர்களை நிதீஷ் ஜி அச்சுறுத்துகிறார். முன்னாள் ஜேடியு தலைவர் ஷரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் இந்த தேர்தலில் மாதேபுராவில் உள்ள பிஹாரி கஞ்சில் இருந்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அவருக்காக வாக்கு சேகரித்த ராகுல் காந்தி, "கொரோனா வைரஸை (Coronavirus) எதிர்த்துப் போராட பிரதமர் மோடி கேட்டார்' கைதட்டுங்கள், கைதட்டுங்கள்" விளக்கு ஏற்றுங்கள், மொபைல் ஃபோனின் டார்ச் ஒளி காட்டுங்கள் எனக்கூறிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்று 22 நாட்களில் முடிவடையும் என்று கூறினார். ஆனால் கொரோனா தொடர்ந்து பரவுகிறது. ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவரது வீட்டிற்கு கால்நடையாக வந்த போது, நிதீஷ்ஜியும் மோடிஜியும் அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என கடுமையாக சாடினார்.
கொரோனா தொற்றுநோய் வந்தபோது, பிரதமர் மோடி (PM Modi) எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், ஊரடங்கு விதியை அமல் செய்தார் என்று ராகுல் குற்றம் சாட்டினார். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பசி தாகத்துடன் கால் நடையாக இங்கு வர வேண்டியிருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசை குறி வைத்த ராகுல் காந்தி, புதிய விவசாய சட்டங்கள் ( Farm Bill 2020) விவசாயிகளின் வாழ்வாதரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்றார்.
ALSO READ | கொரோனா காலத்தில்.. இது தான் மத்திய அரசின் சாதனைகள்: ஆதாரத்தோடு கலாய்த்த ராகுல் காந்தி
விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு சரியான விலை கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியும் நிதீஷ்குமாரும் என்ன செய்தார்கள் என்று ராகுல் கேட்டார். நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று தனது சோளத்தையும் நெல்லையும் விவசாயிகள் விற்கலாம் என்று என்று மோடி கூறுகிறார். ஆனால் விவசாயி எப்படி விற்பனை செய்வார், பீகாரில் நல்ல தரமான சாலை எங்கே? இந்தியா முழுவதும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி), கொள்முதல் முறையை மோடி அரசு அழித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். தொழிலதிபர்கள் இடைத்தரகர்களாக பயனடைய மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR