தெலங்கானாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
இன்று ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்கள் தெரிவிக்கையில்... "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்பிய சந்திரசேகர ராவ் தனது நிலைப்பாட்டினை மாற்றிகொண்டுள்ளார்.
ஒரு மாநிலத்தில் இருமுறை தேர்தல் நடத்தப்பட்டால் செலவினம் அதிகமாகும் என தெரிவித்த இவர் தற்போது சிறிய மாநிலமான தெலுங்கானாவில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்த செயல்பாட்டால் பொது மக்கள் தலையில் கூடுதல் செலவினம் ஏற்றப்படாதா? என கேட்க விரும்புகின்றேன்.
தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டு, வலிமையான சக்தியாக மாநிலத்தில் ஆட்சியில் அமரும் என அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பது தெரியும். மாநிலத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என கூறினார்.
அனைத்து தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிடும் என தெரிவித்த அவர் தனித்து போட்டியிடுமா இல்லை கூட்டணியுடன் தேர்தலை சந்திக்குமா என்று தெளிவாக தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.