COVID-19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் மற்றும் முழு ஊரடங்கு போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகளை பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தளர்த்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு ட்வீட்டில் பதிவிட்டு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் எது பற்றி உரையாற்ற உள்ளார் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க விதிக்கப்பட்ட, தனிப்பட்ட கோவிட் -19 கட்டுப்பாடுகளை பல மாநிலங்கள் தளர்த்தியுள்ள நிலையில், அவர் உரையாற்ற இருப்பட்து குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 19 முதல் நடைமுறையில் உள்ள லாக்டவுன் இரண்டாம் கட்ட அன்லாக் நடவடிக்கையை தொடக்கியுள்ளது. மகாராஷ்டிராவிலும், மெதுமெதுவாக , 5 கட்டங்களாக, அன்லாக் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி பல முறை நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார், அப்போது அவர், மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு, நிலைமையை சமாளிக்க தனது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார். சில நேரங்களில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றுவது இதுவே முதல் முறை.