உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிவ் தத் மற்றும் சுமிதா இவர்களின் 10 மாத குழந்தை பெயர் கிருஷ்ணா. குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தை இறந்து விட்டது.
பெற்றோர்கள் கூறும் போது:- குழந்தையை மருத்துவமனை வார்ட்டில் சேர்க்க அங்கிருந்த நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு உள்ளனர். வார்டில் படுக்கை ஒதுக்குவதற்கு சுத்தம் செய்யும் பெண் வரை லஞ்சம் கேட்டார். இதனை மருத்துவ உதவியாளரிடம் கூறினோம் ஆனால் அவர் எங்களுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் போட்ட ஊசியால் எனது மகனை காப்பாற்ற முடிய வில்லை மிகவும் தாமதமாகி விட்டது. மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட அனைவரும் லஞ்சம் கேட்கிறார்கள். இவ்வாறு கூறினார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் ரூ.30 லஞ்சம் வாங்கி கொண்டு படுக்கை ஒதுக்கிய சுகாதார பணியாளர் பணியில் இருந்து நிக்கபட்டு உள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் அங்கிருந்த நர்ஸ் வேறு பிரிவுக்கு மாற்றபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.