நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்க்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிடப்பட்டது. அதில், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய தொழில்தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை, ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல், தேசவிரோத வழக்கு, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கம் உட்பட பல வாக்குறுதிகள் அடங்கியிருந்தன.
இதுக்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, லோக்சபா தேர்தல்களுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கை, கடந்த காலத்தில் கூறப்பட்டது போல, இதுவும் ஒரு ஏமாற்று வேலை. இந்த தேர்தல் அறிக்கை ஒரு பாசாங்குத்தனமானது ஆகும். காங்கிரஸின் வாக்குறுதிகள் நம்பிக்கை இல்லாதது. இதை மக்கள் நம்பமாட்டார்கள். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் கூட்டணியை பார்த்து பி.ஜே.பி தலைவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் பாஜக தலைவர்களுக்கும் இனவாதத்துக்கு எதிராகவும், சாதிரீதியாகவும் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். அவர்களின் தூண்டிதலுக்கு ஆளாகாமல், தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றி பெற்று, அவர்களுக்கு பதில் அளிப்போம்.
பிஜேபியின் வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். பொதுமக்கள் சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, துப்பாக்கி தொழிற்சாலை தொடங்கினேன், புல்லட் ரயில் கொண்டு வருகிறேன், சீனா, பாக்கிஸ்தான் எனக் கூறி தங்கள் பொறுப்புணர்வுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கின்றார்.
இன்னும் சில நாட்களில் மோடி அரசாங்கத்தின் சத்தம் இல்லாமல் போகும்.
இவ்வாறு மாயாவதி பதிவிட்டுள்ளார்.