நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இந்த முறை, பட்ஜெட் தாக்கல் காகிதமற்ற செயல்முறையாக இருக்கும். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிதி அமைச்சர் காகிதமற்ற முறையில் பட்ஜெட் உரையை படிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார வாகனங்கள் குறித்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் உள்ளது. இதற்கான பல சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் (Budget 2022) அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டரிகளை மேம்படுத்துவதற்கான பொது-தனியார் கூட்டாண்மை முறையில் R&D-க்கு போதுமான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
மேட்டரின் சி.இ.ஓ மற்றும் நிறுவனர், மோஹல் லால்பாய், "2022 ஆம் ஆண்டு மின்சார வாகனங்கள் மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தருணமாகும். வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2022, EV மற்றும் எரிசக்தி சேமிப்புப் பிரிவை மேலும் துரிதப்படுத்த வழி வகுக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்கான ஒரு விரிவான மற்றும் முழுமையான திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
'முதலாவதாக, மின்வாரிய அமைச்சகத்தின் சார்ஜிங் உள்கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு, FAME II மானிய நிபந்தனையான 1.5 லட்ச ரூபாய்க்கு மானியம் பொருந்தக்கூடிய EVயின் எக்ஸ் ஃபாக்டரி விலையில் திருத்தம் செய்யப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. இது ஐந்தாண்டு கால விலைப் புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது' என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!!
இரண்டாவதாக, தற்போது இருக்கும் PLI-ல் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது எம்.எஸ்.எம்.இ (MSME) பிரிவில் இருக்கும் மின்சார வாகன நிறுவனங்ககளும், ஏற்கனவே உள்ள மற்றும் புதிய பங்கேற்பாளர்களையும் பங்கேற்க அனுமதிக்கும் என்று லால்பாய் கூறினார்.
இறுதியாக, லித்தியம்-அயன் செல்கள் மீதான சுங்க வரி குறைப்பு உள்ளூர் கூறு உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பேட்டரி உற்பத்திக்கான ஒட்டுமொத்த செலவுகள் குறையும், இந்தியாவில் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான செலவும் குறையும். இதனால் ஆற்றல் இலக்குகளை அடைய வழி கிடைக்கும்.
இதேபோல், GoGoA1 நிறுவனர் & சி.இ.ஓ ஸ்ரீகாந்த் ஷிண்டே, இந்தியாவில் மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறார். மின்சார வாகனத்துறையில் வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான சில முக்கிய அம்சங்களையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
சவால்கள்: தற்போதைய அனுமதி முறையில், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்துத் துறையின் அனுமதிகளைப் பெற வேண்டும். இதனால் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான பதிவு செயல்முறை தாமதமாகிறது. வேகமான மின்சார வாகன (Electric Vehicles) மாற்றும் செயல்முறைக்கு மையப்படுத்தப்பட்ட அனுமதி உதவியாக இருக்கும். இதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களை இந்த துறை பெறும்.
மானியங்கள்: மானியங்கள், சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் கொள்கைகள் போன்ற உள்கட்டமைப்புகளுடன் புதிய மின்சார வாகனங்களை மேம்படுத்துவதில் இந்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் டீசல் வாகனங்களுக்கான பதிவு செய்யாத வாகன ஸ்கிராப்பிங் கொள்கையையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இந்தியர்கள் தங்கள் வாகனங்களை வாழ்க்கைத் துணையாகக் கருதுகின்றனர். பொதுவாக, மக்கள் வாகனங்களை அடிக்கடி விற்க விரும்புவதில்லை.
மாற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டியை மதிப்பாய்வு செய்தல்: பெட்ரோல் வாகனத்திலிருந்து மின்சார வாகனத்திற்கு மாற்றும் கருவிகளின் விலையில் முக்கிய அம்சம், அதில் செலுத்தப்படும் 18% ஜிஎஸ்டி ஆகும். புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு 5% ஜிஎஸ்டி அமல்படுத்துவது போன்ற மானியங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் புதிய தயாரிப்புகளை குறைந்த விலையில் விற்க முடியும்.
'மின்சார வாகன கன்வெர்ஷன் கிட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களில் இதேபோன்ற எளிய குறைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது விலையை மலிவாக்கும். மக்கள் தங்கள் வழக்கமான எரிபொருள் மோட்டார் சைக்கிள்களை மின்சார வாகனமாக மாற்ற முன் வர இது உதவும்' என்று ஷிண்டே கூறினார்.
ALSO READ | Budget 2022: மொபைலில் நேரலையாக பட்ஜெட் தாக்கலை பார்க்க புதிய app அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR