வருமான வரித் துறையைச் சேர்ந்த 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!!

ஊழல், லஞ்சம் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு!!

Last Updated : Aug 26, 2019, 01:18 PM IST
வருமான வரித் துறையைச் சேர்ந்த 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!! title=

ஊழல், லஞ்சம் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு!!

வருமான வரித் துறையைச் சேர்ந்த ஊழல், லஞ்சம் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில்,“வரித் துறை நிர்வாகத்தில் இருக்கும் சில கருப்பு ஆடுகள், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றன. அவர்கள், முறையாக வரி செலுத்துவோர் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறிய தவறிழைத்தவர்களுக்கு எதிராகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதையொட்டித்தான், வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு நாங்கள் கட்டாய ஓய்வு கொடுத்தோம். என் அரசு, இதைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை விடாது” என்று கூறியிருந்தார். 

இதைப் போல வடிகட்டும் நடவடிக்கை இந்திய வருவாய் சேவைத் துறையிலும் எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம், ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்த 27 IRS உயர் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஊழல், லஞ்சம் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 22 பேரும் ஆய்வாளர்/AO நிலையில் இருந்த மூத்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயமாக ஓய்வு பெற்ற 22 மூத்த அதிகாரிகளின் விவரங்கள்:-

CGST நாக்பூர் மண்டலம்..... 

1. KK உய்கி (29.01.1962) போபால் கண்காணிப்பாளர்

2. SR பரேட் (10.12.1964) போபால் கண்காணிப்பாளர்

CGST போபால் மண்டலம்....

3. கைலாஷ் வர்மா (10.06.1960) 

4. KC மண்டல் (20.01.1962) போபால் கண்காணிப்பாளர்

5. MS தமர் (26.04.1962) போபால் கண்காணிப்பாளர்

6. R.S. கோகியா (-12.1964) போபால் கண்காணிப்பாளர்

7. கிஷோர் படேல் (23.12.1966) போபால் கண்காணிப்பாளர்

8. JC சோலங்கி (14.11.1965) போபால் கண்காணிப்பாளர்

9. SK மண்டல் (04.12.1968) போபால் கண்காணிப்பாளர்

10. கோவிந்த் ராம் மால்வியா (15.04.1963) போபால் கண்காணிப்பாளர்

11. AU சாபர்கரே (01.11.1964) போபால் கண்காணிப்பாளர்

CGST சென்னை மண்டலம்.....

12. S அசோகராஜ் (07.03.1969) கண்காணிப்பாளர்

CGST பெங்களூர் மண்டலம்.....

13. தீபக் M கணேயன் (30.12.1965) கண்காணிப்பாளர்

CGST டெல்லி மண்டலம்.....

14. பிரமோத் குமார், (01.01.1962) கண்காணிப்பாளர்

GST & CE ஜெய்ப்பூர் மண்டலம்.....

15. முகேஷ் ஜெயின், (20.06.1966) கண்காணிப்பாளர்

16. நவ்னீத் கோயல், (01.09.1968) கண்காணிப்பாளர்

GST & CE கோல்கத்தா மண்டலம்...... 

17. அச்சிந்திய குமார் பிரமானிசிக் (12.01.1966) கண்காணிப்பாளர். 

CGST மீரட் மண்டலம்.....

18. VK சிங் (10.01.1963) கண்காணிப்பாளர். 

CGST & CX மும்பை மண்டலம்.... 

19. D.R. சதுர்வேதி (05.03.1961) கண்காணிப்பாளர். 

சுங்கத்துறை பெங்களூர் மண்டலம்....

20. D. அஷோக் (01.06.1967) கண்காணிப்பாளர். 

சுங்கத்துறை மும்பை மண்டலம் II....

21. லீலா மோகன் சிங் (23.05.1968) AO

CGST சண்டிகர் மண்டலம்.....

22. கண்காணிப்பாளர், VP சிங் (22.09.1964). 

 

Trending News