CBSE 2ஆம் பருவத் தேர்வுகள் இந்த தேதியில் தொடங்கும், ஆஃப்லைன் முறையில் நடைபெறும்

CBSE Term 2 Exam Dates: முதன்முறையாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை மத்தியக் கல்வி வாரியம் இரண்டு முறை நடத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2022, 05:50 AM IST
  • சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளன.
  • தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களின் முறையை வாரியம் பின்பற்றும்.
  • விரிவான தேர்வு அட்டவணை விரைவில் cbse.nic.in இல் வெளியிடப்படும்.
CBSE 2ஆம் பருவத் தேர்வுகள் இந்த தேதியில் தொடங்கும், ஆஃப்லைன் முறையில் நடைபெறும்  title=

சிபிஎஸ்இ இரண்டாம் பருவ பொதுத் தேர்வுகள்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான டேர்ம்-2 பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 26 முதல் ஆஃப்லைனில் நடத்தவுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. வாரியம் 2021 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முதல் பருவத் தேர்வுகளை நடத்தியது. இந்த தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

"மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், நாட்டில் உள்ள கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையை கருத்தில் கொண்டு வாரியம் 2 ஆம் பருவத் தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது" என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.

இரண்டாம் பருவத் தேர்வுகளில், மாணவர்கள் அப்ஜெக்டிவ் மற்றும் சப்ஜெக்டிவ் வகை கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். முதல் பருவத் தாள்களில் அப்ஜெக்டிவ் அல்லது பல தேர்வு வகை கேள்விகள் (எம்.சி.க்யூ) மட்டுமே இருந்தன.

தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களின் முறையை வாரியம் பின்பற்றும். சிபிஎஸ்இ கல்வி இணையதளத்தில் மாதிரி தாள்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.

விரிவான தேர்வு அட்டவணை விரைவில் cbse.nic.in இல் வெளியிடப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது. 

முதன்முறையாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை மத்தியக் கல்வி வாரியம் இரண்டு முறை நடத்துகிறது. நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விரைவில் வெளிவருகின்றன சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி, எங்கு பார்ப்பது?

கடந்த ஆண்டு, கோவிட் இரண்டாவது அலையின் போது, ​​சிபிஎஸ்இ-ஆல் பொதுத் தேர்வுகளை நடத்த முடியவில்லை. ஆகையால், தேர்வு முடிவுகளைத் தயாரிக்க மாற்று மதிப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டியிருந்தது.

முதல் பருவத் தேர்வுகளின் முடிவுகள் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகள் குறித்து தவறான தகவல்கள் சில பரவி வருவதாக, தேர்வு வாரியம் சமீபத்தில் மாணவர்களை எச்சரித்தது. இரண்டாம் பருவத் தேர்வுகள் குறித்த அறிவிப்பில், சமூக ஊடகங்களில் வரும் தேர்வு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்த பிறகுதான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த வார இறுதிக்குள் முடிவுகள் வரும் என எதிர்பார்க்காப்டுகின்றது.

மேலும் படிக்க | CBSE 12th Result 2022: ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News