கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு-காஷ்மீரில் 244 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சகம்

கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு-காஷ்மீரில் 244 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 143 முறை பயங்கரவாதிகள் ஊடுருவினர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 13, 2019, 01:36 PM IST
கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு-காஷ்மீரில் 244 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சகம்
Photo: PTI

டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு-காஷ்மீரில் 244 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 143 முறை பயங்கரவாதிகள் ஊடுருவினர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் சதிவேலைகளில் ஈடுப்பட ஊடுருவிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் எத்தனை முறை பயங்கரவாதிகள் நாட்டில் நுழைய பார்த்தார்கள், எத்தனை பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் 135 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டில் 207 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 244 பயங்கரவாதிகளை சுட்டுக்கொண்டனர். 2018-ல் தான் அதிகபட்ச எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒருதரப்பில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிக அளவில் இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு 143 முறை பயங்கரவாதிகள் ஊடுருவல் இருந்தது. இது 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறது. 2017 ஆம் 136 முறையும், 2016 ஆம் ஆண்டு 119 முறையும் பயங்கரவாதிகள் ஊடுருவினர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2018-ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 2,140 சம்பவங்கள் நிகழ்ந்தன, அதில் 14 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) படையினர் வீரமரணம் அடைந்தனர். 53 வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல 2017 ஆம் ஆண்டு 971 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் நான்கு BSF வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.