07:56 PM 21-Dec-19
சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு டிஸ் ஹசாரி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் 14 நாள் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமை, ஆசாத் டெல்லியின் டிஸ் ஹசாரி நீதிமன்றத்தை ஜாமீன் கோரி நாடினார். அவருக்காக டெல்லி காவல்துறை 14 நாட்கள் நீதிமன்றக் காவலைக் கோரியிருந்தது. இந்நிலையில் தற்போது பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு டிஸ் ஹசாரி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்பத்கர் ராணுவம் என்று அழைக்கப்படும் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் சனிக்கிழமை டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பழைய டெல்லி பகுதியில் உள்ள ஜமா மஸ்ஜித்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு தலைமை தாங்கியதை அடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
CAA எதிர்ப்பு போராட்டத்தின் மத்தியில் ஆசாத் முன்னதாக ஜமா மஸ்ஜித்தில் டெல்லி காவல்துறையிடம் இருந்து தப்பினார். அவரது ஆதரவாளர்களால் அவரை எதிர்ப்பு இடத்திலிருந்து அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இன்று CAA எதிர்ப்பு அணிவகுப்புக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்து, கூட்டத்தில் ஒரு பகுதியை இந்தியா கேட்டில் தடுத்து நிறுத்தியது. இந்நிகழ்வின் போது பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேசிய தலைநகரில் வீதிகளில் இறங்கியுள்ளனர். பரபரப்பான போராட்டத்தைத் தணிக்க போக்குவரத்து இயக்கத்தை தடைசெய்தபோதும் கடும் பாதுகாப்பு தடை மற்றும் தடை உத்தரவுகளை மீறி போராட்டங்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே போராட்ட தூண்டுதல் தகவல்கள் பரவாமல் இருக்கு மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் இடைநிறுத்து வைத்துள்ளனர்.
எதிர்ப்பு அழைப்பைக் கருத்தில் கொண்டு ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பாதுகாப்பு நிறுத்தப்பட்டது மற்றும் வெளியேறும் மற்றும் நுழைவு பாதைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன இதனிடையே குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது.