சீனா பிரிக்ஸ் 2017: பிரதமர் மோடி இன்று சீனா பயணம்

Last Updated : Sep 3, 2017, 10:11 AM IST
சீனா பிரிக்ஸ் 2017: பிரதமர் மோடி இன்று சீனா பயணம் title=

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனாவிற்கு பயணம் கொள்கிறார்.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

ஒவொரு ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் மாநாடு, சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரகாசமான எதிர்காலத்திற்கான கூட்டணி என்ற முறையில் உலகளாவிய பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார். 

மாநாட்டின்போது, சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன், இருதரப்பு உறவுகள், தீவிரவாத எதிர்ப்பு, பொருளாதார விவகாரம் ஆகியவை குறித்து மோடி பேச்சு நடத்த உள்ளார். டோக்லம் எல்லைப் பகுதியில் சீனாவும், இந்தியாவும் படைகளை திரும்பப் பெற்று விட்டதால், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சீனாவில் இருந்து மியான்மருக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் தின் கியா மற்றும் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Trending News