சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவதையடுத்து அணுசக்தி பொருள் விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராகச் சேர பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று கூறியுள்ளது சீனா.ஆனால், ஜெய்ஷ்-இ-மொகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாருக்கு ஐநா தடை கோரும் விவாரத்தில் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் என்று கூறியுள்ளது. காரணம் ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எந்த ஒருநாடும் அரசியல் லாபங்களைப் பெறுதல் கூடாது” என்று கூறுகிறது சீனா.
ஜெய்ஷ் இ மொகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அசார் மீது இந்தியா தடை கோரும் விவகாரம் குறித்து பேசிய போடோங், அனைத்துவிதமான பயங்கரவாதங்களுக்கும் சீனா எதிரானது. பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கிடையாது. பிரிக்ஸ் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய விவாதம் நடைபெறும், உலக அமைதிக்கு சீனா உதவும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை என்றார். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எந்த ஒரு நாடும் அரசியல் லாபங்களைப் பெறுதல் கூடாது என்று போடோங் கூறினார்.