விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் அபாயம்

பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் சனிக்கிழமை நண்பகலில் மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றது. 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 10, 2021, 09:40 AM IST
விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் அபாயம்

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அபாயம் அதிகரித்து வருவதால் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் மொத்தம் நிலக்கரி (Coal Crisis) மின் உற்பத்தி நிலையங்கள் 135 உள்ளன. சுமார் 70% வரை நாட்டின் மின் தேவையில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாடியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ALSO READ | சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

நாட்டில் உள்ள பெரும்பான்மையான மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. இதனால் அடுத்து வரும் காலத்தில் நாட்டில் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது. 

இதற்கிடையில் தற்போது டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லியில் மின் விநியோகம் செய்வதற்கு ஒரு நாளைக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகவும் மேலும் மத்திய அரசு மின்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நிலக்கரியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் இது குறித்த துறை அமைச்சகர்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வரக் கூடியகாலத்தில் இதுபோன்ற அபாயம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாட்டின் மற்ற மாநிலங்களான ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலக்கரியின் கடுமையான (Coal Crisis) பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஒரு கோர் மேனேஜ்மென்ட் குழு (CMT) அமைக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு நாளும் நிலக்கரி கையிருப்பை உன்னிப்பாக கண்காணித்து நிர்வகித்து வருகிறது. அதேசமயம் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) மற்றும் ரயில்வேயுடன் தேவையான நடவடிக்கைகளை மின் அமைச்சகம் உறுதி செய்கிறது.

லெபனான் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது
பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் சனிக்கிழமை நண்பகலில் மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றது. கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இதனால், மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு எரிபொருள் சப்ளையர்களுக்கு பணம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ | Vehicle Scrappage Policy: பழைய காரின் பதிவு கட்டணம் 8 மடங்கு உயர்வு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News