கூட்டணி பேச்சுவார்தை முறிவால் தனித்து நிற்கும் காங்கிரஸ்...

டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது இருகட்சிகளிடேயே கூட்டணி இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 12, 2019, 11:21 PM IST
கூட்டணி பேச்சுவார்தை முறிவால் தனித்து நிற்கும் காங்கிரஸ்... title=

டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது இருகட்சிகளிடேயே கூட்டணி இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!

இதன் எதிரொலியாக டெல்லியில் பாஜக-வை எதிர்த்து 4 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.

இவ்விரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை ஆறுகட்டங்களாக நடைபெற்றது எனினும் பேச்சுவார்த்தை பலனில்லாமல் தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்விக்கு டெல்லிக்கு வெளியே காங்கிரஸ் விதித்த நிபந்தனையை ஆம் ஆத்மி ஏற்காதது காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி-யின் ஏழு தொகுதிகளில் நிலவும் மும்முனைப் போட்டியை தவிர்க்கவும், அதனால் பாஜக பலன் பெறுவதை தடுக்கவும் ஒரு புதிய யோசனை செய்கிறது. இதன்படி, மூன்று தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தாமல் விட்டு விடுவது என யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி சாந்தினி சவுக்கின் கபில் சிபல் மற்றும் புதுடெல்லியின் அஜய்மக்கன், முன்னாள் முதல்வரான ஷீலா, ராஜ்குமார் சவுகான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்று தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தும் எனவும், நான்கு தொகுதிகளில் நட்புரீதியான போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல், உபியில் மாயாவதியும், அகிலேஷ்சிங்கும் இணைந்த அமைத்த மெகா கூட்டணியில் அமேதியிலும், ரேபரேலியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News