புது டெல்லி: கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19 - Covid19) அதிகமாக பரவுவதால், அதன் தாக்கம் குறித்து எச்சரிக்கை இருக்க சமூகம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் அரசும் அடிப்படைக் கொள்கைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதாகும்.
வெளிநாடு பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த நோய் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக "பயண கட்டுப்பாடுகள்" மற்றும் "சமூக விலகல்" நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. ஆனால் நாட்டில் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றுநோயின் எண்ணிக்கை முன்னோக்கி வருகிறது. இது பெரும் அபாயம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது இந்தியா கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் நிலையில் உள்ளது. நாட்டில் Covid-19 உயரும் நிலையை பார்த்தால், அதற்கு அடுத்தக் கட்டமான நிலை 3-க்கு விரைவில் இந்தியா சென்றுவிடும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியாவில் வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதே காரணமாகும்.
தற்போது நிலை 2: இந்தியாவில் ஆரம்பத்தில் இந்த நோயின் வழக்குகளின் எண்ணிக்கை ஒன்று, இரண்டு எனக் குறிப்பிடத்தக்கதாகத் தொடங்கியது. அதாவது ஒன்று அல்லது இரண்டு சிறிய நகரங்களைத் தனிமைப் படுத்தப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் நோயின் முதல் வழக்கு கண்டறியப்பட்டது. அதேநேரத்தில் மரணம் குறைவாகவும் மற்றும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே இருந்தார்கள்.
ஆனால் நாளுக்கு நாள் கொரோனோ நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் "லாக் டவுன்" செய்யப்பட்டு உள்ளது. தற்போது வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு அடுத்த நிலைக்கு இந்தியா செல்லத் தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது.
மூன்றாம் நிலை: ஒருவேளை இந்தியா அடுத்தக்கட்ட நிலைக்கு சென்றால், வழக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரிக்கும். மரண எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். எனவே மக்கள் தங்களை மட்டுமில்லை, மற்றவர்களையும் காப்பாற்ற, "சமூக விலகல்" விதியை கடைபிடிக்க வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும். பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தற்போது இந்த நோயின் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது, பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து வந்த ஒருவர், சோதனையின் போது அவருக்கு நோய் இருக்கிறது என்பது கண்டறியப்படாத போது, அவர் வெளியில் சென்று மற்ற நபர்களுடன் தொடரில் இருக்கிறார். பின்னர் அவர் தனது உடல்நிலையில் மாற்றம் வருவதை அறிந்து, சோதனை செய்யும் போது, அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பது தெரிகிறது. ஆனால் இங்கு தான் பிரச்சனை எழுகிறது. கொரோனோ வைரஸ் தொற்று இருக்கும் நபர், யார் யாருடன் பழகினார் என்று சரியாகத் தெரியாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்களை கண்டறிவது சிரமம்.
அவர்களால் தான் மற்றவர்களுக்கு பரவுக்கிறது. இதனால் தான் மத்திய, மாநில அரசுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விதிகளை கடைபிடித்து வெளியில் செல்லாமல், சமூக விலகல் பராமரிக்க வேண்டும்.