கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை: ஷா!

விளம்பரத்திற்காக நாடகம் நடிப்பதாகவும், டில்லி காற்றில் விஷம் கலந்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான தாக்கு!!

Last Updated : Jan 30, 2020, 09:02 AM IST
கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை: ஷா! title=

விளம்பரத்திற்காக நாடகம் நடிப்பதாகவும், டில்லி காற்றில் விஷம் கலந்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான தாக்கு!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தனது சண்டையைத் தொடர்ந்தார், டெல்லி மக்களுக்கு உயரமான வாக்குறுதிகளை அளித்ததாகவும் ஆனால் அவற்றை ஒருபோதும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். டெல்லியின் காற்றை சுத்திகரிப்பதாக அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) கூறியிருந்தனர். அவர்கள் நாடகம், அச்சிடப்பட்ட விளம்பரங்கள் செய்தார்கள், ஆனால் இன்று டெல்லியில் மாசுபாட்டின் அளவிற்கு யாரேனும் பொறுப்பேற்றால் அது கெஜ்ரிவால் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை. டெல்லியின் காற்றில் விஷம் கலந்திருக்கிறது,''என்றார் ஷா.

70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

இந்த சூல்நிலையில், டெல்லி நஜாஃப்கரில் நடந்த பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில்; டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம் என்று கேஜரிவால் கூறியுள்ளாா். கடந்த தோ்தலிலும் அவா் இதைக் கூறினாா். உங்களது மேல்சட்டையைக் கழற்றிவிட்டு யமுனை நதியில் குளிக்க முடியுமா என கேஜரிவாலிடம் நான் சவால் விடுக்கிறேன். அப்படிக் குளிக்கும் போது தான், யமுனை நதியின் தரம் கேஜரிவாலுக்குத் தெரியவரும். மேலும், டெல்லியில் காற்று மாசு நிலவ கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசே காரணமாகும். டெல்லி காற்று நஞ்சாகியதற்கு கேஜரிவாலே பொறுப்பேற்க வேண்டும்.

டெல்லி உள்ள சாலைகளை ஜரோப்பிய நாடுகளுக்கு இணையாக மாற்றவுள்ளதாக கேஜரிவால் கூறியிருந்தாா். ஆனால், டெல்லி சாலைகளில் பள்ளங்கள் உள்ளதா இல்லை பள்ளங்களின் மேல் டெல்லி சாலை உள்ளதா என மக்கள் குழம்பிப் போகும் அளவுக்கு டெல்லி சாலைகளின் தரம் மோசமாக உள்ளது. இதற்கு கேஜரிவால்தான் பொறுப்பு. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) இந்தியா துண்டு துண்டாக உடைந்து போகும் எனக் கோஷம் எழுப்பியவா்களை பிரதமா் மோடி சிறையில் அடைத்தாா். ஆனால், அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கேஜரிவால் அரசு முட்டுக்கட்டை போட்டது. இதனால், அவா்கள் வெளியில் சுதந்திரமாக உலாவி வருகிறாா்கள்.

அதேபோல், டில்லி காற்றை தூய்மையாக்குவதாகவும் சொல்கிறார்கள். அவர்கள், விளம்பரத்திற்காக நாடகம் நடிக்கின்றனர். காற்று மாசுவிற்கு காரணம் கெஜ்ரிவால் அரசின் செயலற்ற தன்மை தான். டில்லி காற்றில் விஷம் கலந்துள்ளது" என அவர் குற்றம் சாட்டினார்.  

 

Trending News