நீண்ட கால பயனுக்கு குறுகிய கால இன்னல்களை பொறுக்க வேண்டும்- மோடி

 மும்பை தேசிய பங்கு சந்தைக்கான புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

Last Updated : Dec 24, 2016, 03:03 PM IST
நீண்ட கால பயனுக்கு குறுகிய கால இன்னல்களை பொறுக்க வேண்டும்- மோடி

ரெய்காட்:  மும்பை தேசிய பங்கு சந்தைக்கான புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. ஆனால், இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது. உலகில் அதிக வளர்ச்சி பெறும் நாடு என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் பொருளாதாரத்தை அரசு மேம்படுத்தியுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் குறுகிய கால வலியை ஏற்படுத்தும். ஆனால், நாட்டின் நீண்ட காலத்திற்கு பலன் அளிக்கும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சந்தையில் லாபம் அடைவோர் நாட்டின் வளர்ச்சிக்கு கட்டாயம் வரி கட்ட வேண்டும் என்றும், குறுகிய அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வலிமையான திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

பணவீக்கம் குறைவாக உள்ளது. நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா விரைவில் அமலாக உள்ளது. அன்னிய முதலீட்டில் சாதனை செய்துள்ளது.

தொழில் துவங்கவும் வணிக சந்தைக்கும் புதிய வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், உற்பத்தி துறை மேம்படும். 

ஒரே தலைமுறையில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எனது கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

More Stories

Trending News