குத்தகைதாரர்களை துன்புறுத்த வேண்டாம், அவர்கள் வாடகையை அரசு செலுத்தும் என நில உரிமையாளர்களுக்கு கெஜ்ரிவால் அறிவிப்பு!!
நாடுமுழுவதும் தீவிரமடையும் கொரொனா வைரஸ் தொற்றை எதிர்க்க மத்திய அரசு 12 நாள் முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால், ஏழை மக்கள் பலரும் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களிடம் தங்களது குத்தகைதாரர்களை துன்புறுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“உங்கள் குத்தகைதாரர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டாம். வாடகை செலுத்த முடியாவிட்டால் அதை ஒத்திவைக்கவும். உங்கள் குத்தகைதாரர்கள் பின்னர் வாடகையை வழங்கத் தவறினால், எனது அரசாங்கம் அதை ஈடுசெய்யும். ஆனால், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என நான் நில உரிமையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன், ”என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர்களை துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். எந்தவொரு, அரசியலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தனது கட்சி தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“இது அரசியலுக்கான நேரம் அல்ல. எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற வேண்டும். எங்கள் கவனத்தை இழக்க எங்களால் முடியாது, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும், ”என்று கெஜ்ரிவால் கூறினார்.
புலம்பெயர்ந்தோர் தகளின் சொந்த கிராமத்திற்க்கு திரும்பும் போது, கெஜ்ரிவால், “இது ஆபத்தானது, ஏனெனில் இது வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எல்லோரும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்றார். மேலும், நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். பள்ளிக் கடட்டங்களில் தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழு அரங்கமும் இதற்காக காலி செய்யபட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 சமூக சமையலறைகள் வைத்து உணவு சமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். அது தவிர பள்ளிக் குழந்தைகளுக்கான அனைத்து சத்துணவுக் கூடங்களிலும் உங்களுக்கு உணவு தயார் செய்யப்படும், யாரும் இடம்பெயராதீர்கள்" என அவர் மேலும் கூறினார்.