அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள 'கமாங்க்' என்ற ஆற்று நீரின் நிறமானது திடீரென்று கருப்பு நிறத்தில் மாறியது. அதுமட்டுமல்லாது அந்த ஆற்றில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மீன்களும் செத்து மிதந்தது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள 'கமாங்க்' எனும் மாவட்டத்தில் தான் இந்த 'கமாங்க் ஆறு' பாய்ந்து வருகிறது. நேற்று காலை நதியின் நிறம் சட்டென்று கருப்பாக மாறி காட்சியளித்தது, ஆற்றில் துள்ளி குதித்த மீன்களும் ஆற்றில் செத்து மிதந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆற்று நீரின் தரத்தினை நீர்வளத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில்,கழிவுப் பொருட்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து இருப்பதால் நீரானது மாசுபாடு அடைந்து, மீன்கள் இறந்திருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணத்திற்கு 1 லிட்டர் நீரில் 300-1,200mg வரை கழிவுப் பொருட்கள் இருக்கும். ஆனால் இந்த 'கமாங்க்' ஆற்று நீரை கணக்கிடுகையில் 1 லிட்டர் நீரில் 6,800 mg கழிவுப் பொருட்கள் இருப்பதாக மாவட்ட மீன்வள மேம்பாட்டு அலுவலர் (DFDO) ஹாலி தாஜோ என்பவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 'கமாங்க்' ஆற்றிலுள்ள மீன்களை யாரும் சாப்பிட வேண்டாம்' எனவும் மக்களுக்கு அதிகாரிகள் கூறினர். இருப்பினும், இந்த ஆற்று நீர் இவ்வளவு தூரம் மாசு அடைந்ததற்கு சீனா தான் முழுவதும் காரணம் என்று அப்பகுதி மக்கள் உறுதியாக கூறுகின்றனர். மேலும் செப்பா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், தாங்கள் வசிக்கும் பகுதிகளின் அருகில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் சீனா, அந்த கழிவுகளை கமாங்க் ஆற்றில் அதிகளவில் கொட்டி விடுகின்றனர்.இந்த காரணத்தினால் தான் 'கமாங்க்' ஆற்றில் உள்ள நீர் மாசடைந்ததுளதாகவும் கூறுகின்றனர்.
ஆற்று நீரின் திடீர் நிற மாற்றமும்,மீன்களின் இறப்பும் அப்பகுதி மக்களிடையே பெரிதும் துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ அதிர்ச்சி ரிப்போர்ட்! இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR