கார்கில்: லடாக்கின் (Ladakh) கார்கில் (kargil) பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் படி, ஞாயிறன்று அதிகாலை 3:37 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 4.7 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால், எந்த வித சேதமும் ஏற்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜூலை 3 ஆம் தேதியன்று மாலை ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் (Magnitude) 4.7 ஆக அளவிடப்பட்டது. தில்லி-என்.சி.ஆர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜூலை 3 ஆம் தேதி அன்று மாலை சுமார் ஏழு மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தின் துவக்கப்புள்ளி மேற்பரப்பிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் கீழே இருந்தது.
ALSO READ: டெல்லி, நொய்டா மற்றும் NCR சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது
ஹரியானாவின் குருகிராம் பகுதியிலும் வெள்ளியன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.7 என்ற தீவிரத்தில் இருந்தது. குருகிராம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும், தில்லி NCR பகுதிகளிலும் தற்போது நிலநடுக்கங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் (Epicentre) குருகிராமிலிருந்து தென்-மேற்கு திசையில் 60 கி.மீ தொலைவில் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் பல நில அதிர்வுகள் தில்லி NCR பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு பெரிய அளவிலான நில நடுக்கத்தை இப்பகுதி எதிர்கொண்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ALSO READ: ஒரே நாளில் இரண்டு இடங்கள்....மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்