வெற்றி வேட்பாளர், கட்சி நடத்தும் கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம்

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி, தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில்,  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், போர் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2021, 11:13 AM IST
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், போர் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
  • பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
  • உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
வெற்றி வேட்பாளர், கட்சி நடத்தும் கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் title=

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி, தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில்,  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், போர் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நேற்று, தேர்தல் பேரணிகளில் அரசியல் கட்சிகள் கோவிட் (Corona) விதிமுறைகளை மீறுவதை  தடுக்கத் தவறியதேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால்கூட தவறில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்தை கூறியிருந்தது. 

கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

தேர்தல் காலங்களில் COVID-19 நெறிமுறையை மீறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படத் தவறியது குறித்து தனது கவலைகளை தலைமை நீதிபதி பானர்ஜி  தெரிவித்தார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளின் வெற்றி பெறும் கட்சிகள், வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் வெற்றி ஊர்வலம் அனுமதிக்கப்படாது. வென்ற வேட்பாளருடன் 2 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  வேட்பாளர் மற்றும் அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடம், தேர்தல் அதிகாரி வெற்றி  சான்றிதழைப் பெறுவார் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ALSO READ | தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News