புதுடெல்லி: புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
Secretary DEA @DasShaktikanta : focus now on printing more Rs. 500 notes. Earlier too, Rs. 500 notes were being printed parallelly.
— Ministry of Finance (@FinMinIndia) December 15, 2016
டெல்லியில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
முதலில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதில் கவனம் செலுத்தினோம். இப்போது கூடுதலாக ரூ.500 நோட்டுகளை அச்சிடுவதில் கவனம் செலுத்துகிறோம். இதன்மூலம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கூடுதலாக புழக்கத்துக்கு வரும். எளிதாக அவற்றை மாற்றிக்கொள்ளவும் முடியும் என்று கூறினார்.
முதன்முறையாக இந்த புதிய ரூபாய் நோட்டுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் பணத்தட்டுபாடு சிக்கல் படிப்படியாக சீராகி வருகிறது என்று அவர் கூறினார்.