அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MP-கள்) ஏழு நாட்களுக்குள் டெல்லியில் உள்ள அரசு விடுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டுக் குழுவின் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ANI உடன் பேசிய பாட்டீல், "அனைத்து முன்னாள் MP-க்களுக்கும் அரசு தங்குமிடங்களை காலி செய்ய ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் இந்த விடுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கலை நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் படி, ஒரு MP மறுமுறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், குறிப்பிட்ட அந்த உறுப்பினர் 30 நாட்களுக்குள் உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டும். ஆனால் இதுவரை 50-60 MP-க்கள் இன்னும் தங்கள் அரசு விடுதிகளை காலி செய்யவில்லை." என தெரிவித்துள்ளார்.
16-வது மக்களவை கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்தும், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்கள் உத்தியோகபூர்வ விடுதிகளை காலி செய்யவில்லை.
புதுடெல்லியின் வடக்கு அவென்யூவில், மக்களவை செயலக இரட்டை குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தை குறித்து பேசினார். "நாடாளுமன்றத்தில் ஒரு புதிய கூட்டத் தொடக்கம் தொடங்கும் போது, புதிய MP-க்கள் தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினையை சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்களின் பிரநிதியாக இருக்கும் MP-கள் தங்கள் தொகுதியிலிருந்து தங்களது மக்களுக்காக டெல்லி வருகின்றனர். அவர்களுக்கு தங்குமிடம் தேடவேண்டிய அவலம் ஏற்படுவது வேதனை" என தெரிவித்துள்ளார்.