நாடாளுமன்றத்தில் பிப்., 12 ஆம் தேதி வாஜ்பாய் உருவப்படம் திறப்பு...

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்!

Last Updated : Feb 7, 2019, 09:21 AM IST
நாடாளுமன்றத்தில் பிப்., 12 ஆம் தேதி வாஜ்பாய் உருவப்படம் திறப்பு... title=

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்!

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 11 ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5.57 மணியளவில் சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதையடுத்து, டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 3 முறை பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News