கீதிகா ஸ்ரீவஸ்தவா.. பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்!

தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) இணைச் செயலாளராகப் பணியாற்றும் கீதிகா ஸ்ரீவாஸ்தவா, சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2023, 11:57 AM IST
  • கீதிகா 2007 முதல் 2009 வரை சீனாவிலுள்ள இந்திய உயர் தூதரகத்தில் பணியாற்றினார்.
  • வெளிவிவகார அமைச்சகத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.
  • பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தினர்.
கீதிகா ஸ்ரீவஸ்தவா.. பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்! title=

புதுடெல்லி: கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் புதிய பொறுப்பாளராக இருப்பார், அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) இணைச் செயலாளராகப் பணியாற்றும், டாக்டர் எம் சுரேஷ் குமாருக்குப் பிறகு  இஸ்லாமாபாத்தில் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) இருப்பார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து நீக்கம்

ஆகஸ்ட் 2019 முதல், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டட்டதை தொடர்ந்து, அதாவது 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை குறைக்க பாகிஸ்தான் முடிவு செய்ததிலிருந்து, இஸ்லாமாபாத் மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் உயர் ஆணையர்களால் வழிநடத்தப்படவில்லை. மேலும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியதை தொடர்ந்து, போரிடும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எப்போதும் நல்ல நிலையில் இல்லை.

பாகிஸ்தான் தூதரக அந்தஸ்தைக் குறைத்த இந்தியா

உயர் ஆணையர்கள் இல்லாத நிலையில், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இராஜதந்திரி ஒரு CDA ஆவார், அவர் இணைச் செயலர் பதவிக்கு சமமான அதிகாரி ஆவார். சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தூதரக அந்தஸ்தைக் குறைக்கும் முன் இஸ்லாமாபாத்தில் உள்ள கடைசி இந்திய உயர் ஆணையராக அஜய் பிசாரியா இருந்தார்.

மேலும் படிக்க | Reliance AGM தொடங்குவதற்கு முன்னரே ஏற்றம் காணும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

தூதரக பொறுப்பினை பொறுப்பினை ஏற்கும் முதல் பெண்

1947 ஆம் ஆண்டு, மறைந்த ஸ்ரீ பிரகாசா பாகிஸ்தானில் இந்திய உயர் ஆணையராக ( பொறுப்பேற்றதிலிருந்து, 22 தூதுரக தலைவர்கள் இருந்தனர். 2005 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான திருமதி ஸ்ரீவஸ்தவா இந்த பொறுப்பினை ஏற்கும் முதல் பெண் ஆவார். தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றும் கீதிகா, இந்தோ-பசிபிக் பிரிவைக் கவனித்து வருகிறார்.  

கீதிகா 2007 முதல் 2009 வரை சீனாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார், மேலும் கொல்கத்தாவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திலும், வெளிவிவகார அமைச்சகத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.

தனித்துவமான சவால்கள் நிறைந்த பணி

இந்தியாவைச் சேர்ந்த பெண் இராஜதந்திரிகள் இதற்கு முன்பு பாகிஸ்தானில் பணியாற்றியுள்ளனர் ஆனால் இது போன்ற உயர் பதவிகளில் இல்லை. கூடுதலாக, பாக்கிஸ்தானில் ஒரு உயர் ஆணையரின் பங்கு, சர்வதேச இராஜதந்திர சாவல்களை தவிர, குறிப்பாக 1947 முதல் இரு நாடுகளுக்கு இடையில், அதன் தனித்துவமான சவால்கள் நிறைந்த பணியாக இருந்து வருகிறது.

இஸ்லாமாபாத்தில் உள்ள தற்போதைய இந்திய பொறுப்பாளர் சுரேஷ் குமார் விரைவில் புது தில்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கியின் பணிப்பாளர் ஜெனரலாக இருக்கும் சாத் வாராய்ச், புதுதில்லியில் புதிய பொறுப்பாளராக இருப்பார். பாகிஸ்தானின் முந்தைய பொறுப்பாளராக இருந்த சல்மான் ஷெரீப் சமீபத்தில் இஸ்லாமாபாத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | சீன எல்லையை தொட உள்ள இந்திய ரயில்வே... மத்திய அரசின் ₹1.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News