புது டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. டெல்லியில் (Delhi) வசிக்கும் மூன்றாவது நபருக்கும் கொரோனா வைரஸ் நோய் (Covid-19) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்குச் சென்று வந்தவர். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கண்காணிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் படிக்க: Beer மதுபானத்தில் CoronaVirus..? ரூ.19 பில்லியன் ரூபாய் இழப்பு
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா (Coronavirus) தாக்கத்தை எதிர்கொள்ள பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. மத்திய சீனாவிலிருந்து (China) பரவத் தொடங்கிய மூன்று மாதங்கள் ஆன நிலையில், இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவரிஸ்டி கருத்துப்படி, உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் குறைந்தது 3,015 இறப்புகளும், உலகின் பிற பகுதிகளில் 267 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) புதிதாக ஆறு நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றுகள் பரவி உள்ளது.
மேலும் படிக்க: மது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் குறைந்தது 1,200 பேருக்கு புதிதாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 124 பேர் இறந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) நேற்று (வெள்ளிக்கிழமை) கூறுகையில், "அனைத்து நாடுகளுக்கும் இந்த நோய்க்கு மருந்து கண்டறிவதற்கும், அதை கட்டுப்படுத்துவதற்கும் பல முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். "இது (தொற்றுநோய்) புவியியல் ரீதியாக விரிவடைந்து கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: Coronavirus Protect: ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகளை எப்படி பாதுகாப்பது?