twitter-ல் மல்லுக்கட்டும் H ராஜா - சுப. வீரபாண்டியன்... ஏன்?

இருவரது கருத்துகளுக்கு ஆதரவாக, எதிராக ட்விட்டரில் பெரும் விவாதங்கள் நடைப்பெற்று வருகிறது.

Last Updated : Mar 1, 2019, 01:25 PM IST
twitter-ல் மல்லுக்கட்டும் H ராஜா - சுப. வீரபாண்டியன்... ஏன்? title=

இந்திய பேர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்யும் விவகாரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் இடையில் ட்விட்டர் வாக்குவாதம் நடைப்பெற்று வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதலை அடுத்து, இந்திய போர் விமானி அபிநந்தம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கைப்பட்டார். பின்னர் பன்முனை வலியுறுத்தல்களுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட போர் விமானியை பாக்கிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

நாடு, நாட்டு மக்களின் அமைதியை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அறிவிப்பை அடுத்து இந்திய பேர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்யும் விவகாரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் இடையில் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை சுப.வீரபாண்டியன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாதவு...

"#அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற #இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?" என குறிப்பிட்டிருந்தார்.

சுபவீயின் இந்த பதிவுக்கு பதிலாக எச். ராஜா சற்று முன்னர் வெளியிட்ட பதிவில்...
 
"பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் இராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர்.

ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலை பார்க்காமல் ஜாதீய பதிவிட்டவர் தானே இவர்:

இருவரது கருத்துகளுக்கு ஆதரவாக, எதிராக ட்விட்டரில் பெரும் விவாதங்கள் நடைப்பெற்று வருகிறது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் இன்று மாலை 4 மணியளவில் வாகா எல்லை வாயில் வழியாக இந்தியா அனுப்பி வைக்கப்படுவார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளார்.

Trending News