புதுடெல்லி: நாடு விடுதலை பெற்ற பிறகு, காஷ்மீருக்கு மட்டுமே இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை கொடுத்த Article 370 நீக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில் அங்கு பயங்கரவாதம் குறைந்துவிட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குவதற்கான வரலாற்று முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த ஒராண்டில், காஷ்மீரில் 370 வது பிரிவை நீக்கியதன் தாக்கம் தெரியத் தொடங்கிவிட்டது. காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை முன்பை விட சிறப்பாகியுள்ளது.
2019 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வன்முறை குறைந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, 370 வாபஸ் பெற்ற பின்னர், பயங்கரவாதத்தின் நிகழ்வு சுமார் 36% குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 15 வரை பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தொடர்பான 188 சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில், 120 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
கடந்த ஓராண்டில் 136 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 21 கையெறி குண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 பயங்கரவாதிகள் என்ற அளவில் இருந்தது, அதோடு அப்போது 51 கையெறி குண்டு தாக்குதல்கள் நடந்தன.
உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, கடந்த ஆண்டு, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 23 பொதுமக்களும், 75 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதுவே இந்த ஆண்டில் 22 பொதுமக்களும், 35 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
IED தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 6 IED தாக்குதல்கள் நடந்தன, அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஒரேயொரு IED தாக்குதல் மட்டுமே நடைபெற்றது.
பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டன
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 110 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில், 50 க்கும் மேற்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனைச் சேர்ந்தவர்கள். லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், ISJK மற்றும் அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Read Also | ரஃபேல் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?
இந்த ஒரு ஆண்டில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ரியாஸ் நாய்க், லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹைதர், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் தளபதி காரி யாசிர் மற்றும் அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்தின் புர்ஹான் கோகா ஆகியோரும் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர, 22 பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உதவி செய்த 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஒரு ஆண்டில், 22 பயங்கரவாத இலக்குகள் கண்டறியப்பட்டு சுமார் 190 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்டவற்றில் AK-47 பெருமளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாத அமைப்புகளில் உள்ளூர் இளைஞர்களின் சேர்க்கை 40% குறைந்துள்ளது. இந்த ஆண்டு 67 இளைஞர்கள் மட்டுமே பயங்கரவாத பாதைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கும் ஹுரியத் கான்ஃபிரன்ஸின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, தனது அமைப்பில் இருந்து விலகியதும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.