Monsoon Alert: இந்தியாவின் வட மாநிலங்களில் இயற்கை சீற்றம், மின்னல் தாக்கி 75 பேர் பலி

இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்ட நிலையில்,  ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 10:45 AM IST
  • ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் - IMD
  • ராஜஸ்தானில், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 7 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிர் இழந்தனர்.
  • மின்னல் தாக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் - பிரதமர் மோடி
Monsoon Alert: இந்தியாவின் வட மாநிலங்களில் இயற்கை சீற்றம், மின்னல் தாக்கி 75 பேர் பலி title=

புதுடெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்ட நிலையில்,  ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேசிய தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களில் அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு குறித்து அச்சம் உள்ளது.

இடைவிடாத பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் (Himachal Pradesh) மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இயல்பு  வாழ்க்கை முடங்கிப் போனது. உத்தரபிரதேசத்தில் மின்னல் காரணமாக சுமார் 40 பேர் இறந்தனர். மத்திய பிரதேசத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில், காங்க்ரா, டல்ஹெளசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல நாட்களுக்குப் பிறகு பலத்த மழை பெய்தது. தர்மஷாலாவில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டு சொத்துகள் சேதமடைந்தன. தர்மசாலாவில் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காங்ரா மாவட்டத்தில் இரண்டு பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

ALSO READ: Watch Scary Video: இமாச்சல பிரதேசத்தில் அதிகன மழை, கடுமையான வெள்ளம்

ராஜஸ்தானில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 7 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிர் இழந்தனர். இந்த இயற்கை பேரழிவில் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரழிவின் போது உதவ, மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படை (NDRF) குழுக்கள் விரைந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்தார்.

ராஜஸ்தானின் சில பகுதிகளில் மின்னல் தாக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என பிரதமர் மோடி (PM Modi) அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ALSO READ: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News