இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ரயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.
மும்பை - அகமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் புல்லட் ரயில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ 1.1௦ லட்சம் கோடி மதிப்பில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே 12 ரயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 70 முறை இந்த ரயில் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 750 பயணிகள் ஒரே நேரத்தில் இந்த புல்லட் ரயிலில் பயணம் செய்ய முடியும்.
12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.