ஹிமாச்சல் பிரதேசத்தின் பெரும்பாலன பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை, பல்வேறு இடங்களையும் வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது.
மேகவெடிப்பு ஏற்பட்டது போல் கொட்டிய மழையால், குலு (Kullu), காங்ரா (Kangra), சிம்லா (Shimla), பிலாஸ்பூர் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பியாஸ் (Beas) ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாண்டி மாவட்டத்தின் வழியே பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலையில், பியாஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணாலியில், ஆற்றை ஒட்டிய பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து ஒன்று, பொங்கி பிரவாகம் எடுத்துச் செல்லும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள், மழையின் கோரத்தாண்டவத்தை உணர்த்துகின்றன. குலு மாவட்டத்தில், திடீரென பெருக்கெடுத்து பாய்ந்த வெள்ளத்தில் சிக்கிய 19 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Kullu: Normal life disrupted following heavy rainfall & flash flood in the region. Kullu Deputy Commissioner Yunus Khan says, 'we are trying to evacuate & rehabilitate people. I request people not to go to high reach areas & near rivers.' #HimachalPradesh (23.09.18) pic.twitter.com/ic2ZrrLE7k
— ANI (@ANI) September 23, 2018
இதையடுத்து, பெரும்பாலான பகுதியில் வெள்ள அபாயன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.