புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொகுத்த தரவுகளின்படி, ஆகஸ்ட் 31 வரை ரூ.3.32 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.0.24 லட்சம் கோடியாக இருந்தது. இதனால், மே 19ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் திரும்பி வந்துவிட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில் 87 சதவீதம் டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13 சதவீதம் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளதாக முக்கிய வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ செப்டம்பர் 30 வரை மீதமுள்ள காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | RBI அளித்த ஜாக்பாட் செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்களுக்கு நிம்மதி!!
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2,000 மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு மே 19 அன்று அறிவித்தது மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்னர் அவற்றை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ மக்களை வலியுறுத்தியது.
ரூ.2000 நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் வங்கிகளில் டெபாசிட் செய்து, வங்கிகளில் பரிமாற்றம் செய்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றும் போது, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சரியான அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துகின்றன.
வங்கி கணக்கு அல்லாத வாடிக்கையாளர் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வரும்போது, அவர்கள் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை வங்கியில் வழங்க வேண்டும். இதுதவிர கூடுதலாக, தனிநபர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், NREGA அட்டை, பான் அட்டை அல்லது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள சான்றை வழங்கவேண்டும்.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க திட்டமா? செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் சூப்பர் போன்கள்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ