ஐதராபாத்: ஐதராபாத்தில் ஆபாச படங்கள் மற்றும் ஐ.எஸ். வீடியோ காட்சிகளை பார்த்த சுமார் 65 சிறுவர்களில் 11 இளம் சிறுவர்களை போலீசில் சிக்கினர்.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஆபாச படங்கள் மற்றும் ஐ.எஸ். தலைவெட்டும் வீடியோ காட்சிகளை பார்த்த 65 சிறார்கள் பிடிபட்டனர். நேற்று ஐதராபத்தில் போலீஸ் தலைமையகத்தில் பிடிபட்ட சிறார்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் போலீஸ் உதவியுடன் கொடுக்கப்பட்டது. இந்த கவுன்சிலிங்கிற்கு சிறார்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
ஐதராபாத் பழைய நகரில் போலீஸ் நடத்திய சோதனையில் சிறார்கள் ஆபாச பட இணையதளங்களை பார்த்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியே தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இன்டர்நெட் புரவ்சிங் சென்டர்களின் உரிமையாளர்கள் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் குழந்தைகள் பள்ளியை விட்டு வந்த பின்னர் அவர்களுடைய நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.